தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு


           தேனீ வளர்ப்பு


           விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை, கையாளலாம்

           தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
           தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.

           தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்
         தேனீ வளர்ப்பின்  சிறப்பம்சங்கள்
 
           தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்
           தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது

           பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது
           தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்
           தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது

           உற்பத்தி முறை
           தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்
         தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்
           கூடு
           இது, ஒரு சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது.
           தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது.
           புகைப்பான்
            இது தேனீ வளர்ப்பில்,  இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும்.

            இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம்.

            இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

           துணி
           கத்தி
           இறக்கை

           தேனீக்களின் வகைகள்
           இந்தியாவில்
        மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா)
   
        இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலணிக்கு 50-80 கிலோ தேன் கிடைக்கும்.

         சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா)  
·         இவை ஓரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள்

         இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா)
·         இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை.
·         ஒரு வருடத்தில், தலா ஒரு காலணியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும்.

         கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்):
           இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது.
           மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள்.
           இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும்.

         தேன்கூடுகளை நிறுவும் முறை
           தேன் வளர்க்கும் இடமானது,
           நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும்,
           மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

           சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு
           எறும்பு ஏருவதை தடுக்க வேண்டும்
           வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை அமைக்க வேண்டும்.


           தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள்,
           ஏனைய விலங்குகள் ,
           பரபரப்பான வீதிகள் மற்றும்
           தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.
         தேனீ காலனிகளை அமைக்கும் முறை
·         தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.


·          இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.
·          முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனைய தேனீக்களை கவர்ந்து இழுக்கும்.


           அதிக நெரிசலை தவிர்க்கவும்

·         சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.


           காலனி நிர்வாகம்
           தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.

           பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

            வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு,

            ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை,

            ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க   தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.

           தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும்.

           மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.

           மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.

           மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
         தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.

           தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்

            ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்